சமூக செயற்பாட்டாளரான 60 வயது பெண் விசாரணைக்கு அழைப்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைக்காக நாளை புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளார்.

மூதூர் – தோப்பூர் முன்னம்போடிவெட்டை பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நவரத்தினராசா அஞ்சலிதேவி (வயது 60) என்பவருக்கு திருகோணமலை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பழைய பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு வருகை தருமாறு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்