மாணிக்கக்கல் வியாபாரியின் பயணப்பொதியை திருடிய பெண் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பயணப்பொதியை திருடிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை – களுபோவில பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் பயணப்பொதி கடந்த மாதம் 28ஆம் திகதி திருடப்பட்டுள்ளது.

குறித்த பயணப்பொதியில் மாணிக்கக்கல் தொடர்பான ஆவணங்கள், மாணிக்கக்கல் பொதி செய்வதற்கான பெட்டிகள் மற்றும் ஏனைய பெறுமதியான பொருட்கள் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விமான நிலைய பாதுகாப்பு கெமரா அமைப்பைக் கண்காணித்ததன் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், ஹெம்மாதகம – பெதிகம்மன பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வர்த்தகரிடம் இருந்து திருடப்பட்ட பயணப்பொதி சந்தேக நபரால் எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்