கரையோர மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரையோர மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அளுத்கமயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயில் இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் தொழிநுட்பக் கோளாறுக்கு உள்ளாகியமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த ரயிலை சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.