
நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி ஒருவர் மீது வாள் வெட்டு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில், நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உறவினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று கடந்த சனிக்கிழமை இரவு 08.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக நலன்சார் செயற்பாட்டாளர் ஒருவர், கடந்த வெள்ள அன்ர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர், மதுபோதையில் சென்று, தனக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக செயற்பாட்டாளரின் உறவினர் ஒருவரை, அந்த சமூக செயற்பாட்டாளர் என்று நினைத்து வாளினால் வெட்ட முயன்றுள்ளார் .
அதனை தடுக்க முயன்ற அவருக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
வாள் வெட்டுக்குள்ளானவர், மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததை தொடர்ந்து, மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
