
நடிகை சோபிதா மர்மமான முறையில் மரணம்
கன்னட நடிகை சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் கர்நாடக மாநிலம் – ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியைச் சேர்ந்தவர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குத் திருமணம் ஆனது.
திருமணத்திற்குப் பின்னர் சோபிதா சிவன்னா ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மான முறையில் நடிகை சோபிதா உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சோபிதாவின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
