மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

-மூதூர் நிருபர்-

திருகோணமலையில் சுமார் மூன்று தசாப்தங்களாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட வீதி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.

திருகோணமலையிலுள்ள உவர்மலை மத்திய வீதி மற்றும் லோவர் வீதியை இணைக்கும் 22 ஆம் படைப்பிரிவு முகாமுக்கு உட்பட்ட வீதியே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.

இவ்வீதியான கடந்த காலங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்