
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது வெய்யப்பட்டுள்ளார்.
கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கடந்த சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குருநாகல் பொல்காவலை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து, 5 கிராம் 340 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரை கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
