
வவுனியாவில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் உயிரிழப்பு!
-வவுனியா நிருபர்-
வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது, குழுவாக வந்த சிலர் வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
வாள்வெட்டுக்கு உள்ளாகி படுகாயமடைந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில், நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
