உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

குருநாகல் மாவட்டம் – நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானபாய பிரதேசத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஹாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்