மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழப்பு

கொழும்பு மாவட்டத்தில் தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுவல – கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தலங்கம வடக்கு பகுதியை சேர்ந்த 74 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

கடுவல பகுதியிலிருந்து பத்தரமுல்லை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்து சென்ற பெண் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் விபத்தில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.