
தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
வெலிமடை மற்றும் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 26, 32 மற்றும் 56 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பூஜை பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
