பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை

சீரற்ற காலநிலையினால் ஆறு வகையான பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு போதுமானதல்ல என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக 338,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அரசாங்கம் உரிய முறையில் மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கோரியுள்ளனர்.

இதேவேளை, நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் போன்ற பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 40,000 ரூபாவுக்கு மேற்படாத தொகை இழப்பீடாக வழங்கப்படும் என விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

எவ்வாறாயினும், குறித்த இழப்பீட்டுத் தொகை தமக்கு போதுமானதாக அமையாது என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்