கிழக்கு மாகாண ஆளுநர் காத்தான்குடிக்கு விஜயம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் நோக்கில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்நாயக்க இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.
தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமியின் அழைப்பின் பேரில் விஜயம் செய்த அவர், காத்தான்குடி வாவிக் கரையோரம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுடனும் உரையாடினார்.
மேலும் மக்களுக்கு நிவாரண உதவிகள் சீராக சென்றடைவதை உறுதிப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காங்கேயனோடை, பாலமுனை ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்த ஆளுநர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி செயற்குழு உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.