250 ஆண்டுகள் பழமையான அரசமரம் குடை சாய்ந்தது!
-யாழ் நிருபர்-
யாழ்.நவாலி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று நேற்று வீசிய பலத்த காற்றினால் குடை சாய்ந்தது.
வைரவர் கோயில் முழுமையாக சேதம் அடைந்திருந்ததுடன் மதிலும் சேதமடைந்திருந்தது. இருப்பினும் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை.
குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் ஊர் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்