எதிர்வரும் ஒன்பதாம் திகதி அளவில் இன்னுமொரு தாழமுக்கம்!

தற்போது சற்று அமைதியுடன் நகர்ந்து கொண்டிருக்கின்ற தாழமுக்கமானது எதிர்வரும் முதலாம் திகதி அளவில் முழுதாக வலுவிழக்கக்கூடிய சாத்தியும் காணப்படுகின்றது

இந்நிலையில், அதேபோன்று எதிர்வரும் ஒன்பதாம் திகதி அளவில் இன்னுமொரு தாழமுக்கம் ஒன்று வங்காள விரிகுடாவில் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இதுவும் ஏற்படுமாக இருந்தால் மீண்டும் ஒரு வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கின்றது, தற்போது சகல குளங்களும் நிரம்பி இருக்கின்றன, இனிவரும் காலங்களில் கிடைக்கின்ற மழை வெள்ள நிலமையே ஏற்படுத்தும், என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்