மரம் வீதியின் குறுக்காக வீழ்ந்ததில் மின்சார வயர்கள் அறுந்து மின்தடை!

-யாழ் நிருபர்-

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 80 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மரம் ஒன்று வீதியின் குறுக்காக வீழ்ந்ததில் மின்சார வயர்கள் அறுந்து சில மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டிருந்ததது.

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மின்சார சபையினரை அழைத்து வீதியில் அறுந்து தொங்கிய மின்சார வயர்களை சீர் செய்ததுடன் மரத்தையும் அப்புறப்படுத்தி மின்சார சேவையை வழமைக்கு கொண்டு வந்தவுடன் வீதி போக்குவரத்தையும் சீரமைத்துள்ளனர்.

இதேவேளை தமது அனர்த்த முகாமைத்துவ சேவை தொடர்ந்தும் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.