கிரான் தொப்பிக்கல வீதிக்கு பூட்டு: படகு சேவை முன்னெடுப்பு

-கிரான் நிருபர்-

நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கிரான் தொப்பிக்கல வீதி முற்றாக மூடப்பட்டுள்ளதால் கிரான் பிரதேச செயலகம் மற்றும் இராணுவம் இணைந்து படகு சேவையினை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதன்படி, சந்திவெளி தீவிலிவெட்டை பகுதிக்கு ஒரு படகு சேவையும், கிரான் தொப்பிமலை பகுதிக்கு ஒரு படகு சேவையும், கிண்ணையடி பகுதிக்கு ஒரு படகு சேவையும் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை கிரான் பிரதேச செயலகம் தற்போது கோரகல்மடு பிரதேசத்தில் பிரதேச செயலாளர் விடுதியில் தற்காலிகமாக இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெள்ள அனர்த்தம் காரணமாக கிரான் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட 6 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.