வட்ஸ்அப்பில் பாரிய நிதி மோசடிகள் : தனிப்பட்ட தரவுகளை யாருடனும் பகிர வேண்டாம்!
இலங்கை தற்போது சமூக ஊடக தளமான வட்ஸ்அப்பை ஹேக்ங் (Hacking) செய்வதன் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகள் அதிகரித்துள்ளது.
ஒரு முறை கடவுச்சொற்கள் (OTP), வங்கி கணக்கு அல்லது கிரடிட்/டெபிட் கார்ட் விவரங்களைக் கோரி பல்வேறு xன்லைன் இணைப்புகளை அனுப்புவதன் மூலம் நிதி மோசடி மேற்கொள்ளப்படுகிறது.
அனுப்பப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்தவுடன், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவரின் வட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்து, பாதிக்கப்பட்டவரின் தொடர்புகளில் இருந்து பணத்தை மோசடி செய்ய பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், OTPகள், வங்கிக் கணக்குகள் மற்றும் அட்டை விவரங்கள் உள்ளிட்ட தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.