மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

பிரதான பொருளாதார மத்திய நிலையங்களில் ஒன்றான கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது, அதிகளவிலான மரக்கறிகளின் விளைச்சல் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மலைநாட்டு மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன.

இந்தநிலையில், மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்