அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அனுமதி

அமெரிக்காவின் நீண்டதூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவது பொருத்தமான மற்றும் உறுதியான பதிலடிக்கு வழிவகுக்குமென ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமது எல்லைக்குள் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்வதானது ரஷ்யாவுக்கு எதிரான விரோதப் போக்கில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் எனவும் அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.