
இஸ்ரேலிய தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரதானி பலி
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ஊடகப் பிரதானி மொஹமட் அஃபிப் கொல்லப்பட்டார்.
லெபனான் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது இவர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கட்டடத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரதானி மொஹமட் அபிஃப் தங்கியிருந்ததாகவும், அவருடன் தங்கியிருந்த மேலும் ஒருவருவம் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
