
அருட்தந்தை திருச்செல்வம் அவர்களின் இறுதித் பயணம்
சமூக சேவையாளரும் அருட்தந்தையுமான அருட்பணி ஆர்.திருச்செல்வம் திடீர் சுகயீனமுற்று கடந்த 13 ஆம் திகதி புதன்கிழமை இயற்கையெய்தியிருந்த நிலையில் அவரது இறுதிப் பயணம் நேற்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு – வீச்சுக்கல்முனையை பிறப்பிடமாக கொண்ட தேற்றாத்தீவு பங்கின் பங்குத்தந்தை அருட்பணி ஆர்.திருச்செல்வம் அவர்களின் இறுதித்திருப்பலி நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் புனித மரியாள் பேராலயத்தில் இடம் பெற்றது.
இதன் போது மட்டக்களப்பில் உள்ள அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், பொது நிலையினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உற்றார் உறவினர்கள், பொலிஸ் உயரதிகாரிகள், பொது மக்கள் என பலரும் இறுதித் திருப்பலியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஆலையடிச்சோலை மயானத்தில் அருட்தந்தையின் நல்லடக்கம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
