தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்கள்!

நடந்து முடிந்த  பாராளுமன்றத் தேர்தலில் ஒன்பது மாகாணங்களிலும் இருந்தும்  11 சட்டத்தரணிகள் உள்ளடங்கலாக   31 பெண் வேட்பாளர்களை தேசிய மக்கள் சக்தி களமிறக்கியிருந்தது.

மேலும் தேசிய பட்டியலிலும் நான்கு பெண்களின் பெயர்களை தேசிய மக்கள் சக்தி பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி களமிறங்கிய பெண் வேட்பாளர்களில் நாடு முழுவதும் உள்ள தேர்தல் மாவட்டங்களில் இUந்து 11 பெண் வேட்பாளர்கள் மக்களின் அதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளனர்.

நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம்

1.ஹரிணி அமரசூரிய – கொழும்பு மாவட்டம்
2.கெளசல்யா ஆரியரத்ன – கொழும்பு மாவட்டம்
3.ராய் கெளி பல்தசரர் – கொழும்பு மாவட்டம்

4.ஹசாரா நயனதாரா – காலி மாவட்டம்

5.கீதா ஹேரத் – குருநாகல் மாவட்டம்

6.நிலாந்தி கோட்டஹாச்சி – களுத்துறை மாவட்டம்

7.ஒஷானி உமங்கா – களுத்துறை மாவட்டம்

8.அம்பிகா சாமுவேல்  – பதுளை மாவட்டம்

9..ஹிருணி விஜேசிங்க  – புத்தளம்  மாவட்டம்

10.சரோஜா  போல்ராஜ்  – மாத்தறை மாவட்டம்

11.கிருஸ்ணன் கலைச்செல்வி –  நுவரெலியா மாவட்டம்