
மூன்றாவது பெரும்பான்மையை வென்றுள்ள இலங்கை தமிழ் அரசுக்கட்சி!
இலங்கையின் 10 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது.
அன்றையதினம் 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி மூன்றாவது பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது.
1. தேசிய மக்கள் சக்தி (NPP) – 6,863,186 வாக்குகள் (159 ஆசனங்கள்).
2. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,968,716 வாக்குகள் (40 ஆசனங்கள்)
3. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 257,813 வாக்குகள் (8 ஆசனங்கள்)
4. புதிய ஜனநாயக முன்னணி (NDF) – 500,835 வாக்குகள் (5 ஆசனங்கள்)
5. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 350,429 வாக்குகள் (3 ஆசனங்கள்)
6. சர்வஜன அதிகாரம் (SB) – 178,006 வாக்குகள் (1 ஆசனம்)
7. வேறு கட்சிகள் – 945,533 வாக்குகள் (9 ஆசனங்கள்)
அதன்படி இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் இருந்து,
1. சி. சிறிதரன்(யாழ்மாவட்டம்)
2. இரா.சாணக்கியன்(மட்டக்களப்பு மாவட்டம்)
3. ஞா.ஶ்ரீநேசன் (மட்டக்களப்பு மாவட்டம்)
4. இ.ஶ்ரீநாத்(மட்டக்களப்பு மாவட்டம்)
5. க.கோடீஷ்வரன்(அம்பாறை மாவட்டம்)
6. ச.குகதாசன்(திருகோணமலை மாவட்டம்)
7. க.ரவிகரன்(வன்னி மாவட்டம்) மற்றும் தேசிய பட்டியலூடாக தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர் என மொத்தமாக 8 உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
