தனிப்பெரும்பான்மையை பெற்ற ஜனாதிபதிக்கு சந்தோஷ் ஜா வாழ்த்து!

நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சக ஜனநாயக நாடாக இந்தியா, இந்த மக்கள் ஆணையினை வரவேற்பதாகவும், மக்களின் நலன்களுக்காக இருதரப்பு உறவினை மேலும் வலுவாக்க உறுதி கொண்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.