அழகுக்கலை நிலைய உரிமையாளரான பெண் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 18 கோடியே 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் கைதாகியுள்ளார்.

அவரிடம் இருந்து 22 கிலோகிராம் குஷ் மற்றும் ஹஷீஸ் ரக போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நேற்று வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலங்கையில் அழகுக்கலை நிலையமொன்றை நடத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.