
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மேற்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
