
இலங்கையில் வரலாற்று சாதனை செய்த பெண்!
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய 655,289 விருப்பு வாக்குகளைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த எண்ணிக்கை இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற அதிகூடிய வாக்குகளாகும்.
இதற்கு முன்னர் அதிக விருப்பு வாக்குகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தார்.
அவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 527,364 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனை முறியடித்து 6 இலட்சத்திற்கும் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்று தேர்தல் வரலாற்றை மாற்றியுள்ளார்.
