புதுடெல்லியில் அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் விடுமுறை!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் தொடர்ந்தும் வளி மாசடைந்து வருவதால் அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளை இணையம் மூலம் நடத்துமாறு அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

வளி மாசடைந்து வருவதால் புதுடெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சுவாசக் கோளாறு மற்றும் கண் வீக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வளி மாசடைவுடன் அடர்ந்த புகை மூட்டம் நிலவுவதால் டெல்லி – இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.