
வாக்காளர்களுக்கு இலஞ்சம்: வேட்பாளர் கைது
கற்பிட்டியில் வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் இன்று வியாழக்கிழமை வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி கற்பிட்டி அல்மனார் முகாமுக்கு அருகில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிக் கொண்டிருந்த போது பொதுத் தேர்தல் வேட்பாளர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வேட்பாளரிடம் இருந்து 97,200 ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
