ஹப்புத்தளையில் விபத்து: 3 பேர் காயம்

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை நகரில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை நகரில் வீதி ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மற்றும் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நபர் மீது வேககட்டுப்பாட்டை இழந்து வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது நடந்து சென்றுகொண்டிருந்த பெண் உட்பட மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரும் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட நபரும் காயமடைந்து பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக தியதலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.