விழுங்கிய நிலையில் போதைப்பொருள் கடத்தல்: வெளிநாட்டவர் கைது

இலங்கைக்கு விழுங்கிய நிலையில் 4 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளைக் கடத்திவந்த வெளிநாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியேரா லியோன் நாட்டைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரால் விழுங்கிய நிலையில் கடத்திவரப்பட்ட கொக்கேய்ன் அடங்கிய 56 வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.