
வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
புஸ்ஸ – வெல்லமடை பகுதியில் இன்று புதன் கிழமை காலை வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியில் சென்ற காருடன், மோதி விபத்திற்குள்ளானது.
காலி சவுத்லேண்ட் பெண்கள் கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனையடுத்து பொலிஸாரினால் விபத்துக்குள்ளான பேருந்திலிருந்த வாக்குப் பெட்டிகள் வேறு வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
