விவேக் ராமசாமிக்கும் எலான் மஸ்க்கிற்கும் மிக முக்கிய பதவி வழங்கும் ட்ரம்ப்

பிரபல செல்வந்த தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க தொழிலதிபரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசாமி ஆகியோருக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் உயர்ந்த பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி அரசாங்கத்தின் புதிய செயல்திறன் திணைக்களத்தை வழிநடத்துவதற்கான பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

குறித்த இருவரும் இணைந்து தமது நிர்வாகத்தில் அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் முகவரகங்களை மறுசீரமைப்பதற்கும் வழியை ஏற்படுத்துவர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.