துப்பாக்கிகளை டிசம்பர் 30க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்
பாதுகாப்பிற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் மற்றும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாக பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை டிசம்பர் 30 க்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அறிக்கையொன்றை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அமைச்சு, குறித்த காலக்கெடுவுக்குள் அவர்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கோரியுள்ளது.
துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை செய்து ஆயுதங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்