வயலிலிருந்து மீட்கப்பட்ட சடலம்

பலாங்கொடை, பின்னவல பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பின்னவல பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் பலாங்கொடை நெல்லிவல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுயைடவர் ஆவார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.