காதல் முறிவால் உயிரை மாய்த்த யுவதி

மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை பாரதி முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய ராமச்சந்திரன் இந்திராதேவி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருடைய காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.