
இலங்கை சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாட்டில் தற்போது சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார்.
குறித்த காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த சில நாட்களாக, சிறுவர்களுக்கு இருமல், சளியுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகின்றது. அதுமட்டுமின்றி டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டெங்கு குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
எனவே மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய இரத்தப் பரிசோதனை செய்துகொள்மாறும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
