
தெஹி அத்தகண்டியவில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு
தெஹி அத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தமடுல்ல பகுதியில் யானை தாக்கியதால் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தமடுல்ல, தமனேவெல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே காட்டு யானையால் தாக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
