உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைது

இரு வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது உள்நாட்டு துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா கங்கொடகம பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தபகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

மேலும், கிரில்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபடயாய பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்