11 மாதங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகும் ரயில் சேவை

தலைமன்னாருக்கான ரயில் சேவை 11 மாதங்களின் பின்னர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான முதலாவது ரயில் அன்றைய தினம் மாலை 4:15 மணிக்கு புறப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

நேர அட்டவணையின்படிஇ குறித்த ரயில் இரவு 9.50 அளவில் தலைமன்னாரை சென்றடையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.