வீட்டினுள் நுழைந்த தனியார் பேருந்து: சாரதி காயம்

பதுளை- மஹியங்கனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படலபிட்டிய பிரதேசத்தில் பலகொல்ல எனும் பகுதியில் வீதியை விட்டு விலகிய தனியார் பேருந்து அருகில் இருந்த வீடொன்றின் மதிலில் மோதி வீட்டையும் சேதப்படுத்தியுள்ளது.

விபத்தில் பேருந்தின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன் வேறு எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பேருந்து விபத்துக்குள்ளான போது, வீட்டில் குழந்தை உட்பட தம்பதியினர் இருந்ததாகவும்,ஆனால் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால், குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.