
தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்
கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால், பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேக நபர் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
