
புகையிரதத்தில் மோதி பெண் மரணம்
ஹிக்கடுவ, அமரசேன மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வல்பிட்டிமுல்ல, தெவலபொல பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவராவார்.
காலியில் இருந்து அளுத்கம நோக்கி நேற்று சனிக்கிழமை மாலை பயணித்த புகையிரதத்தில் மோதி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
