
சம்மாந்துறையில் ஐஸ்போதைபொருளுடன் ஒருவர் கைது
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 955 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
