ஹெரோயினுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளை நகரில் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

“ஹாகய”  மஹியங்கனை வீதி, அம்பகஹஓய, பதுளை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை நகரில் சந்தேகத்துக்கு இடமான நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபரிடம் இருந்து 6 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.