
ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டாரவுக்கு கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
