நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்

பாலிவுட் திரையுலகில் கிங் கான் என்று அறியப்படும் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் இந்திய மதிப்பில் 50 இலட்சம் ரூபாய் கேட்டுக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மும்பை பந்த்ரா பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சைபர் குற்றப்பிரிவு பொலிஸாருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரின் விசாரணையில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இருந்து அந்த அழைப்பு வந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னதாக, நடிகர் சல்மான்கானுக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போதும் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்