
மட்டக்களப்பில் மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலை பிரதான வீதியைச் சேர்ந்த ஏ.றமீஸ்குமார் (வயது – 40) என்ற விவசாயியே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த நபர் சம்பவதினமான இன்று மாலை வந்தாறுமூலை உப்போடை வயல்பகுதிக்கு சென்று விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறி வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற அனுமதியைப் பெற்று பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
