ட்ரம்பின் வெற்றியுடன் வீழ்ச்சி கண்ட தங்கத்தின் விலை

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டெனால்ட் ட்ரம்பின் வெற்றியுடன், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையானது ஒரே இரவில் இரண்டு வீதம் சரிவடைந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது இன்று வியாழக்கிழமை 2,655.31 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சடுதியாக குறைந்துள்ளது.

24 கரட் தங்கம் ஒரு பவுண் 215,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 199,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்